×

காஷ்மீரில் பண்டிட் கொலை ஹூரியத் அலுவலகம் முன்பாக போராட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஹூரியத் மாநாடு கட்சி அலுவலகத்தின் எதிரே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சவுதரி கண்ட் பகுதியை சேர்ந்த புரான் கிருஷ்ணன் என்பவர் சனியன்று தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பண்டிட் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள ஹூரியத் மாநாடு கட்சி அலுவலகம் எதிரே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹூரியத் மாநாடு கட்சிக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், அலுவலக நுழைவாயில் கேட்டில் ‘இந்தியா’ என ஸ்பிரே அடித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….

The post காஷ்மீரில் பண்டிட் கொலை ஹூரியத் அலுவலகம் முன்பாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pandit ,Kashmir ,Hurriyat ,Srinagar ,Hurriyat Convention Party ,Jammu ,Hurriyat Office ,Dinakaran ,
× RELATED சென்னையில் அமைக்கப்பட்டுள்ள...