×

டாக்சியில் பயணம் செய்தபோது நடிகை கடத்த முயற்சி டாக்சி டிரைவர் கைது

மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகையை கடத்த முயன்றதாக டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் நடிகை மனவா நாயக். இவர் இந்தி படங்களில் மட்டுமல்ல மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். நடித்தது மட்டுமல்ல பல படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை டாக்சி டிரைவர் ஒருவர் நடிகை மனவாவிடம் முறைகேடாக நடந்துள்ளார். இது பற்றி பேஸ்புக்கில் நடிகை மனவா குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது: சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்காக பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் டாக்சி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் ஏறினேன். டாக்சியில் போகும் போது, டிரைவர் போனில் பேசுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்தேன். பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள சிக்னலையும் டிரைவர் மீறினார். இதற்காக டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் டாக்சி வீடியோவில் பதிவு செய்தார். அப்போது டிரைவர் போலீஸ் கான்ஸ்டபிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தட்டிக் கேட்டதால், ஆத்திரம் அடைந்த டிரைவர், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். பின்னர் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள இருளான பகுதியை நோக்கி டாக்சியை வேகமாக ஓட்டினார். சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவ உதவி எண்ணுக்கு போன் செய்தேன். ஆனால், டாக்சி டிரைவர் வேகமாக ஓட்டியதோடு, போனில் யாரிடமோ பேசினார். பின்னர் உவி கேட்டு கூச்சலிட்டேன். அதன்பிறகு நான் பத்திரமாக மீட்கப்பட்டேன் என தெரிவித்திருந்தார். பின்னர் பாந்த்ரா குர்லா போலீசில் சென்றும் புகார் அளித்தார். இதனை தொடர்ந்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அண்டாப் ஹில்லை சேர்ந்த 24 வயது டாக்சி டிரைவரை கைது செய்தனர்.  …

The post டாக்சியில் பயணம் செய்தபோது நடிகை கடத்த முயற்சி டாக்சி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bollywood ,Manava Naik ,
× RELATED கொலை மிரட்டல் காணொளி: சல்மான் கானுக்கு...