×

ரோடு போட்டதாக ரூ.8.40 லட்சம் மோசடி உதவி பொறியாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியில் ரோடு போட கடந்த 2020ல் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் எதுவும் நடக்காததால், விசாரணையில் ரோடு போடுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8.40 லட்சம் செலவிடப்பட்டு, ரோடு போடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. போலி போட்டோ இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உதவி பொறியாளர் ராஜா பாரதி (41), கோவை சப் டிவிஷன் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் (56), சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் விமலா (51), துணை தலைவர் வினோத்குமார் (40), ஒப்பந்ததாரர் பழனிச்சாமி (40) ஆகியோர் கூட்டு சேர்ந்து இந்த மோசடியை செய்திருப்பது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் விசாரணையில் தெரியவந்தது. புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பேர் மீதும் ரூ.8.49 லட்சம் வழக்குப்பதிவு செய்தனர். …

The post ரோடு போட்டதாக ரூ.8.40 லட்சம் மோசடி உதவி பொறியாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Karamadai ,Panchayat Union ,Cheran Nagar ,Mahalakshmi Avenue ,Dinakaran ,
× RELATED சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து...