×

12 லட்சம் தீபாவளி தீபங்கள்…

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னதாக, உத்தரபிரதேசம் அயோத்தியில் உள்ள ராம் கி பைடி காட்ஸில் தீபோத்ஸவ் கொண்டாடப்படுவது வழக்கம். கணக்கில்லாத வகையில் கோவில் மற்றும் குளக்கரைகளில் லட்சக் கணக்கான விளக்குகளை பொதுமக்கள் வைப்பர். இந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி ஆறாவது தீபோத்ஸவ் (விளக்குகளின் திருவிழா) கொண்டாட வேண்டி உத்தரப்பிரதேச அரசு முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்கள் இல்லாத அளவிற்கு கின்னஸ் சாதனை படைக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி வைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமோக சாதனையை அடைய, அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண் பானைகள், மண் விளக்குகள் கொண்டு வரப்பட உள்ளன. ராம் பாடியில் விளக்குகள் சேகரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 30 நிமிடங்களுக்கு மேல் விளக்குகள் எரியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடம் மக்கள் நீண்ட நேரம் விளக்குகள் எரிவதைக் காணலாம். முன்பெல்லாம் விளக்குகள் விரைவாக அணைந்து, பல ஊர் மக்கள் வந்து சேர்வதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிடும். ஆனால் இந்த வருடம் வருகை தரும் மக்களை ஏமாற்றக் கூடாது என இதற்கென முன்னேற்பாடுகள் எடுத்து வருகிறது உ.பி அரசு. 30 மில்லிக்கு பதிலாக, 40 மில்லி எண்ணெய் விளக்குகளில் ஊற்றப்படும், இதனால் அவை நீண்ட நேரம் நின்று நீடித்து எரியும் என திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், உத்தரபிரதேச சுற்றுலாத் துறை மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகம் இணைந்து கின்னஸ் உலக சாதனைக்கான தீபோத்ஸவ் நிகழ்வை நடத்தினர். இந்த வருடம் தங்களின் சாதனையை தாங்களே முறியடிக்கும் விதமாக 12 லட்சம் விளக்குகள் ஏற்ற உள்ளனர். கடந்த ஆண்டு, தீபோத்ஸவத்தில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டன என்பது கூடுதல் தகவல்….

The post 12 லட்சம் தீபாவளி தீபங்கள்… appeared first on Dinakaran.

Tags : Diwali ,Deepothsav ,Ram ,Ki Baidi Gods ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்