ஹாலிவுட்லயா இப்படி...

பைரேட்ஸ் ஆப் தி கரிப்பியன் வரிசை தொடர் ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஜானி டெப். அக்வாமேன் படத்தில் நடித்தவர் ஹம்பர் ஹெர். இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 2 வருடமே இணைந்து வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். அவர்களுக்கு இடையேயான பிரச்னை இன்று வரை தீரவில்லை. ஜானி டெப் போதைப் பொருள் உட்கொண்டு தன்னை பலமுறை தாக்கியதாகவும், தலைமுடியை பிடித்து வீடெல்லாம் தரதரவென இழுத்துச் சென்றார் எனவும் ஹம்பர் ஹெர் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மாஜி காதலர் அளித்த ஓவியத்தை 2013ம்ஆண்டு ஜானி டெப் தீ வைத்து எரித்தார். என்  முகத்தில் குத்தியதில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஹம்பர் ஹெர்டு தன் பெயரை கெடுப்பதாகக் கூறி அவரிடம் ரூ.347 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் டெப்.

Related Stories: