×

ரகம் ரகமா ஷாராரா… கலர் கலரா கராரா… 2022 தீபாவளி டிரெண்ட்!

ஷாராரா, கராரா சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர்கள் கால உடைகளாக இருந்த ராயல் அரசிகள், இளவரசிகளின் உடைகள். அடுத்தடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தொடர்ந்து நம் இந்தியாவில் பஞ்சாபி மக்கள், இந்திய முஸ்லிம்கள் என ஆக்கிரமித்த அக்கால ராயல் டிரெண்ட். எப்படி இன்றும் அதன் ஃபேஷன் மணம் மாறாமல், கல்யாண நிகழ்வுகள் வரை தன்னைத் தக்கவைத்து ஜொலிக்கின்றன இந்த ஷாராரா, கராரா? விவரமாக விளக்கினார் செலிபிரிட்டி டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் பேன்ஸி ராஜா. ‘முதலில் ஷராரா, கராரா, இரண்டுக்கும் கீழே அணிகிற பாட்டம்வேர்களைக் கொண்டுதான் வித்யாசப்படுத்துவோம். ஷராராதான் பழங்கால முறைப்படி உருவாக்கப்பட்ட உடை. அதாவது இடுப்புப் பகுதியில் இருந்தே விரிந்து, அகலமான , அடர்த்தியான பாட்டம்கள் உடன் மேலே ஷார்ட் குர்தா, அல்லது லாங் குர்தா, ஃபிளேர் குர்தா என மேட்ச் செய்துக்குவாங்க. இந்த முறை லெபனியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த உடைகள். பெரும்பாலும் நாமப் பயன்படுத்தும் சல்வார், பட்டியலா பாட்டம், பலாஸோ உட்பட அனைத்தும் லெபனியன் கலாச்சார வரவுகள்தான். பாலோஸோ பாட்டம்கள் ஒரே துணியில் அகலமாக, நீளமாக நேராக இருக்கும். ஆனால் ஷாராரா பாட்டம்கள் மேலே மெயின் மெட்டீரியல் லேசாகவும், அதனுள் மூன்று நான்கு மெட்டீரியல்கள் உட்பட சுற்றளவும் அதிகமா இருக்கும். கால்களை இணையாகச் சேர்த்து நின்றால் அப்பட்டமா ஸ்கர்ட் மாதிரி தோற்றம் கொடுக்கறதுதான் ஷாராரா உடைகள். அதிலேயே முட்டிக்கு மேலே வரை டைட்டாக பேன்ட் பின்னர் கீழ்த் தொடையில் முட்டிக்கு மேலே ஒரு பெல்ட், அதிலே இருந்து அகலமாக விரியும் பாட்டம் நுனிகளாக கராரா உடைகள் இருக்கும். இதற்கும் மேலே மேட்சிங் ஷார்ட் குர்தா அல்லது லாங் குர்தாதான். இந்த பாட்டம்களைத்தான் 2000ம் ஆண்டு துவக்கத்திலே சிம்ரன், ஜோதிகா உட்பட நிறைய ஹீரோயின்கள் பயன்படுத்தினாங்க. முக்கியமா ‘கபி குஷி கபி கம்’ படத்தின் ரிலீஸ்க்குப் பிறகு இந்த ஷாராரா, கராரா உடைகள்தான் ஹீரோயின்களின் ஆஸ்தான கிராண்ட் உடைகள், அல்லது டூயட் உடைகளா மாறிடுச்சு. பாலிவுட் கிளாமர் கிராண்ட் உடைகள்ல இந்த ஷாராரா, கராரா பாட்டம்கள் அதற்கு மேட்சிங்கான கிராம் டாப்கள் அல்லது பிகினி லைன் டாப்கள்தான் நிறைய பயன்படுத்தினாங்க. இதனுடைய இன்னொரு வெர்ஷன்தான் பூட்கட் ஜீன்ஸ் பாட்டம்கள்’ எப்படி தைக்க வேண்டும், எப்படி அணிய வேண்டும் மேலும் தொடர்ந்தார் பேன்ஸி ராஜா. ‘லெபனியன் காலத்தில் அங்கே இருந்த ராயல் பெண்கள் உடைகளா இருந்து தொடர்ந்து 16ம் நூற்றாண்டுகள்ல நவாப் மன்னர்கள் இந்த உடைகளை ஆசியா முழுக்க பிரபல படுத்தினாங்க. தொடர்ந்து இஸ்லாமிய மன்னர்கள் வருகை. அவர்கள் கூடவே இந்தியா வந்து சேர்ந்திடுச்சு. தொடர்ந்து பாலிவுட்டில் ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிரீத்தி ஜிந்தா துவங்கி நம்மூர் ‘சிம்ரன்’, ‘ஜோதிகா’, ‘கிரண்’, இவர்கள்தான் இந்த ஷாராரா , கராரா பாட்டம்களை அதிகம் பயன்படுத்திய ஹீரோயின்கள். இப்போ ‘பாஜிராவ் மஸ்தாணி’ படத்தில் தீபிகா படுகோன் உடைகளா டிரெண்டாக திரும்பவும் இந்த உடைகள் வழக்கத்துக்கு வந்திடுச்சு. இந்த உடைகளுக்கு ஸ்பெஷலே அதனுடைய கிராண்ட் லுக்தான். கற்கள், ஸரிகை, எம்பிராய்டரி, ஆரி இப்படி நிறைய வேலைப்பாடுகள் இருக்கறதால் டெல்லி மாதிரியான சில நகரங்கள்ல கல்யாண உடையே இந்த ஷாராரா, கராரா உடைகள்தான் பயன்படுத்துறாங்க. அடுத்தடுத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வருகை, மிடில் கிளாஸ் மக்களுக்கும் ஏத்த மாதிரி காட்டன், பாலி காட்டன், ரேயான், ஜார்ஜெட் மெட்டீரியல்கள்ல ரூ.800கள்லயே இந்த உடைகள் கிடைக்க ஆரம்பிச்சதன் விளைவு இன்னைக்கு வரைக்கும் கிராண்டான கட் உடைகள்ல லெஹெங்கா, அனார்கலி, மாதிரி ஷாராரா, கராரா உடைகளும் தனி அந்தஸ்தோடு இருக்கு. பொதுவாகவே ஒரு ஷாராரா அல்லது கராரா பாட்டம் தைக்க ஒரு பக்கம் காலுக்கு மட்டுமே 4 மீட்டர் துணி தேவைப்படும். சுமார் 8 முதல் 10 மீட்டர் துணிகள் வரை கூட பயன்படுத்துவோம். அப்போதான் அந்த அகலமான அடுக்கடுக்கான லுக் கொடுக்க முடியும். மேலும் சில்க், ஜார்ஜெட், நெட், மற்றும் சாட்டின் ஜார்ஜெட் மெட்டீரியல்கள்லதான் ஷாராரா, கராரா டிரெஸ் டிசைன் செய்வோம். காரணம் லைட் வெயிட்டா துணிகளா இருந்தால்தான் ஃபுளோ லுக் கிடைக்கும். ஷாராரா பொருத்த வரை ஹிப் வெய்ஸ்ட் பகுதிதான் மிக முக்கியம். அதிலே கொஞ்சம் ஃபிட்டிங் சரியில்லைன்னாலும் பாட்டம்வேர் சரியா பொருந்தாது. அதேபோல் கராரா உடைகள்லயும் முட்டிக்கு மேல் வரை சரியான ஃபிட்டான அளவில் இருக்கணும். இல்லைன்னா அங்கங்க பிடிக்கும்’ எப்படிப்பட்ட ஆக்ஸசரிஸ்கள் பயன்படுத்தலாம், தொடர்ந்தார் பேன்ஸி ராஜா.‘உடைகள் கிராண்டா இருந்தா அதன் வண்ணங்களிலேயே சந்த் பாலி டேங்லர் காதணிகள், ஒரு நெத்திச் சுட்டி, உடன் சொக்கர் நெக்லஸ் இப்படி மேட்ச் செய்துக்கலாம். பீட்ஸ், பாசி, குந்தன் நகைகள் கூட நல்ல மேட்சிங்கா இருக்கும். மீனாகாரி நகைகளும் சரியான லுக் கொடுக்கும். எம்பிராய்டரி, சில்க், ஸரிகை வேலைப்பாடுகள் செய்த பொட்லி அல்லது சுருக்கு பை ஸ்டைல் ஹேண்ட்பேக்குகள், கோல்டன் நிற ஹேண்ட்பேக் அல்லது கிளட்ச் பேக்குகள் சரியான பொருத்தமா இருக்கும். காலில் ஜெய்ப்பூர் கோலாபூரி அல்லது ஜூட்டி செருப்புகள் அல்லது ராயல் ஷூக்கள் மேட்ச் செய்துக்கலாம்.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post ரகம் ரகமா ஷாராரா… கலர் கலரா கராரா… 2022 தீபாவளி டிரெண்ட்! appeared first on Dinakaran.

Tags : Mughal ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை