×

ஆர்ஆர்ஆரில் ராஜமவுலிக்காக நடிக்கிறேன்; அலியா பட்

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை அலியா பட். இதில் நடிப்பது குறித்து அவர் கூறியது: ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதில் நான் நடிக்க காரணமே அவரது படம் என்பதால்தான். பாகுபலி படத்தின் பெரிய வெற்றிக்காக இதை சொல்லவில்லை. மகதீரா முதல் நான் ஈ வரை அவரது மற்ற படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆடியன்சுக்கு எது பிடிக்கும் எதை ரசிப்பார்கள்  என்பதை அறிந்தவர் ராஜமவுலி.

அவரது படங்களில் ஆக்‌ஷன்தான் பிரதானம். ஆனால் அது எமோஷனுடன் கூடிய ஆக்‌ஷனாக இருப்பதாலேயே பேமிலி ரசிகர்களையும் அவரது படங்கள் பிடிக்கிறது. இந்த படத்தில் சீதா என்ற வேடம். கடினமான கேரக்டர். அதற்காக தயாராகி வருகிறேன் என்றார். இதில் ராம் சரண் தேஜா ஜோடியாக அலியா நடிக்க உள்ளார். ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகியுள்ளார்.

Tags : Rajamouli ,Alia Bhatt ,RRR ,
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி