பட விழாவில் திலீப்புக்கு கிஸ் கொடுத்த நடிகை

நடிகை மானபங்கம் வழக்கில் சிக்கியவர் திலீப். மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நடிகை வழக்கு காரணமாக, இவருக்கு எதிராக பிரபல நடிகைகள் பலரும் ஒன்று சேர்ந்து அறிக்கை வெளியிட்டனர். இவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கவும் காரணமாக இருந்தனர். நடிகைகள் பலரும் இவருக்கு எதிராக இருக்கும் நிலையில், மம்தா மோகன்தாஸ் செய்த காரியம், மல்லுவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடத்தி சமக்‌ஷம் பாலன் வக்கீல் படத்தில் திலீப்புடன் நடித்தார் மம்தா.

இந்த படத்தின் வெற்றி விழா நடந்தபோது, திலீப்பை புகழ்ந்து தள்ளிய மம்தா, திடீரென அவருக்கு மேடையில் நின்றபடி ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத திலீப், வெட்கத்தில் தலைகுனிந்தார். இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மம்தா எனக்கு நல்ல தோழி. இதில் தவறு எதுவும் கிடையாது’ என இது பற்றி விளக்கம் அளித்துள்ளார் திலீப்.

Tags : Actress ,film festival ,Dileep ,
× RELATED பிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை