×

பல்லவர்கள் ஆட்சிக்கால பின்னணியில் உருவாகும் படம்

சென்னை: சோழ மன்னர் களின் ஆட்சிக்கால பின்னணியில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதையடுத்து பல்லவர்களின் ஆட்சிக்கால பின்னணியில் ‘நந்திவர்மன்’ படம் உருவாக்கப்படுகிறது. ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ சுரேஷ் ரவி, ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ் நடிக்கின்றனர். பெருமாள் வரதன் எழுதி இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னன் நந்திவர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில், அவர் வாழ்ந்த ஊர் பூமிக்கு அடியில் புதைந்துவிடுகிறது. இச்சம்பவம் நடந்த பின்பு, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இப்போதும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தைக் கண்டுபிடிக்க தொல்லியல் துறையினர் வருகின்றனர். அவர்கள், ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அதன் பின்னணி என்ன என்று,வரலாற்றுச் சம்பவங்களுடன் இன்றைய காலத்துக்கு ஏற்ப சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்ல இருக்கிறோம். செஞ்சிக் கோட்டையில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம்….

The post பல்லவர்கள் ஆட்சிக்கால பின்னணியில் உருவாகும் படம் appeared first on Dinakaran.

Tags : Pallavar ,Chennai ,Chola ,Pallavara ,Dinakaran ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு