×

பெங்கால் அணியிடம் வீழ்ந்தது தமிழகம்

லக்னோ: சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் எலைட் இ பிரிவு லீக் ஆட்டத்தில், பெங்கால் அணியுடன் மோதிய தமிழகம் 43 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பெங்கால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 38, சுதிப் குமார் 27, ரித்விக் ராய் 32, ஷாபாஸ் அகமது 42* ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். தமிழக பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 2, கிஷோர், வருண், நடராஜன், அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய தமிழகம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன் மட்டுமே எடுத்து 43 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சாய் சுதர்சன் 64 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அபராஜித் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பெங்கால் பந்துவீச்சில் ஷாபாஸ் 3, முகேஷ், பிரமானிக் தலா 2, ஆகாஷ், விரித்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்கால் 4 புள்ளிகளை தட்டிச் சென்றது….

The post பெங்கால் அணியிடம் வீழ்ந்தது தமிழகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bengal ,Lucknow ,Elite E division league ,Syed Mushtaq Ali Trophy T20 series ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...