×

ஷாருக்கானுக்கு கதை சொன்ன அட்லி

விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. ஷங்கர், முருகதாஸ் போல், பாலிவுட் செல்ல வேண்டும் என்பது அட்லியின் ஆசை. இப்போது அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தெறி படத்தை இந்தியில் இயக்க அவர் முயன்றார். இந்நிலையில் ஷாருக்கானை இயக்க அவர் விரும்பியுள்ளார். ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்த ஷாருக்கானை அட்லி சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். தெறி அல்லது மெர்சல் படத்தை  இந்தியில் ஷாருக்கானை வைத்து ரீமேக் செய்ய அட்லி கூறியிருப்பதாக தெரிகிறது.

அடுத்த படம் என்ன என்பது குறித்து முடிவு எடுக்காமல் இருக்கிறார் ஷாருக்கான். தொடர் தோல்வி படங்களால் துவண்டுள்ள அவர், அடுத்து கண்டிப்பாக வெற்றி படத்தில் நடித்தே ஆக வேண்டும் என விரும்புகிறார். தொடர் ஹிட் படங்களையே தந்து வரும் அட்லி மீது ஷாருக்கான் நம்பிக்கை வைத்து கால்ஷீட்  தருவாரா என்பது விரைவில் தெரியும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Tags : Adli ,Shahrukh ,
× RELATED ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்த அனிருத்