×

எனக்கு மார்க்கெட் இருக்கு... தயாரிப்பாளர்களுக்கு தெரியல... ஆண்ட்ரியா அதிரடி

மாளிகை படத்தை டான்ஸ் மாஸ்டர் தில்.சத்யா இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, ஜே.கே, ஆலி, கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் ஆண்டனி வெளியிட்டார். பிறகு ஆண்ட்ரியா பேசியதாவது: இது முதலில் கன்னடத்தில் உருவாக வேண்டிய படமாக இருந்தது. ஆனால், தமிழில் எனக்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால், தமிழில் உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னார்.

இப்படத்தை உருவாக்கும் ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியிருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனால், தமிழில் இருப்பவர்களுக்கு ஏனோ அப்படி தெரியவில்லை. நான் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளேன் என்றாலும், இதுதான் உண்மை நிலை. மாளிகை படத்தில் நடிக்க முக்கிய காரணம்,  எனக்கு இரட்டை வேடம் என்பதுதான். இந்த கதையும், படமும், என் நடிப்பும் ரசிகர்களுக்கு  நிச்சயம் பிடிக்கும்.

Tags : producers ,Andrea ,
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...