டக்குனு டக்குனு.... சிவகார்த்திகேயன்!

கத்தி, வணக்கம் சென்னை படங்களுக்காக அனிருத் இசையில் ஹிப் ஆப்  ஆதி 2 பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ஹிப் ஆப் ஆதி இசை அமைக்கிறார். இப்படத்துக்காக டக்குனு டக்குனு என்ற பாடலை அனிருத் பாடி தந்திருக்கிறார்.
இதற்கு தேங்கஸ் சொல்லியிருக்கும் ஆதி,’நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி.

எனது இசையில் பாடல் பாடியது இனிமையான அனுபவம். இதற்கு வாய்ப்பு தந்த சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷுக்கும் நன்றிகள். இந்த அனுபவம் மிகவும் சிறப்பாக அமைந்தது. பாசிடிவ் எண்ணங்களுடன் எனர்ஜி லெவலும் அதிகரித்தது. இன்னும் சிலபல பாடல்களில் இணைவோம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Dukunu Tukunu ,Sivakarthikeyan ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி