×

அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனி கபூர்

நடிகர் அஜித் விரைவில் பாலிவுட்டில் நடிப்பார் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் வெளியான பிங்க்  திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். வழக்கறிஞராக நடிக்கும் அஜித்துடன் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்  தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ' நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜித் நடிப்பில் அசத்தியுள்ளார். விரைவில் இந்தியில் படம் நடிக்க அஜித் விருப்பம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். அப்படியானால் என்னிடம் 3 ஆக்ஷன் கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்'  என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Bonnie Kapoor ,Ajith Bollywood ,
× RELATED ஸ்ரீதேவி கதையை கைவிட முடியாது; போனி கபூருக்கு டைரக்டர் பதில்