×

அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை; மாநில மொழிகளில் மருத்துவக்கல்வி வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக்கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது ஆகும்.மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும். 2022-23ம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 7,200 இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த இடங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சேரும் மாநிலங்களில், அம்மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படும் என்பதால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்காகத் தான் கூடுதலாக ஆங்கிலத்திலும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று அரசு தரப்பில் வாதிடப்படலாம். இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான். எனவே, தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழை கட்டாய பயிற்றுமொழியாக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை; மாநில மொழிகளில் மருத்துவக்கல்வி வேண்டும்: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Annipurani ,Chennai ,Bambayana ,Anbumani ,Tamil Nadu ,India ,Anmani ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...