சலீம் இயக்குநருடன் கைகோர்த்த சசிகுமார்

என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க சசி குமார் ஒப்பந்தமாகியுள்ளார். அரவிந்த்சாமி - திரிஷாவை வைத்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கினார். இந்த படத்தின் படக்குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் என்.வி.நிர்மல்குமார். அதன்படி, இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார்.

சசிக்குமார், தற்போது  'கொம்பு வச்ச சிங்கம்டா', 'நாடோடிகள் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது சலீம்' பட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது. இந்த படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories:

More