அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு, ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : actress ,Ajith ,
× RELATED விளையாட்டில் முதலீடு செய்யும் நடிகை