அஜித் படத்துக்காக எடை குறைந்தார் வித்யாபாலன்

தமிழில் முதல்முறையாக நடிக்க உள்ளார் வித்யாபாலன். பலமுறை அவரை தமிழில் நடிக்க அழைத்தும் மறுத்து வந்தார். இந்நிலையில் அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு உடல் எடை கூடி குண்டான வித்யா பாலன், இதனால் பல பட வாய்ப்புகளை இழந்தார். கடும் உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறிது எடை குறைத்தார். ஆனாலும் அவரது பருமனான உடல் அமைப்பு காரணமாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தொடர் முயற்சிகளுக்கு பிறகு இப்போது அவர் 10 கிலோ எடை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய தோற்றத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் நடிக்கிறார். கதைப்படி பிளாஷ்பேக்கில் அஜித் மனைவியாக அவர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Tags : Weightless Vidya Balan for Ajith ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி