×

டி.ஐ.ஜி வேடத்தில் விவேக்

வெள்ளை பூக்கள் என்ற புதுப்படத்தில், கதையின் நாயகனாக நடித்துள்ளார், விவேக். இதில் அவர் முதல்முறையாக டி.ஐ.ஜி கேரக்டர் ஏற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘அமெரிக்கா நாட்டை சேர்ந்த பொறியாளர் விவேக் இளங்கோவன் கதை சொன்னார். இந்த கேரக்டருக்கு சத்யராஜ் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். ஆனால், இதுவரை இந்த கேரக்டரில் நடிக்காத ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்.

படத்தில் நான் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து கொலைகள் செய்யும் கொலைகாரனை எப்படி நான் கண்டுபிடிக்கிறேன்? கொலைகளுக்கான காரணம் என்ன என்பது படத்தின் கதை. தவிர சார்லி, பூஜா தேவரியா ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் 19ம் தேதி படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Vivek ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது