×

கடவர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் அமலாபால்

ராட்சசன் படத்துக்கு பிறகு, தமிழில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். மேலும் மலையாளத்தில் 3 படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடவர் என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அமலாபால் அறிமுகமாகிறார்.

இதில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார். 'கடவர்' படத்தில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலர் அமலா பாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Tags : Amala Paul ,
× RELATED நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த...