×

பொன்னியின் செல்வனில் யாருக்கு என்ன கேரக்டர்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை, அதே பெயரில் படமாக்குகிறார், இயக்குனர் மணிரத்னம். இதில் யார், எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்த கரிகால னாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபு, சுந்தர சோழராக அமிதாப் பச்சன், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். விரைவில்  படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றாலும்,  இதுவரை மணிரத்னம் தரப்பு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடவில்லை.

Tags : character ,Ponniyin Selvan ,
× RELATED ஜீவா மகள் இயக்குனர் ஆகிறார்