×

முனீஸ்வரன் சிலை முன்பு சாமி ஆடிய மனிஷா

நடராஜ், மனிஷா யாதவ் நடிக்கும் படம் சண்டிமுனி. மில்கா செல்வகுமார் இயக்குகிறார். அவர் கூறியதாவது: இப்படத்துக்காக 30 அடி உயர முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டது. சிலை முன் மனிஷா யாதவ் பக்தி பரவசத்துடன், ‘பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா’ என்ற பாடல் காட்சியில் நடித்தார். அப்போது அவருக்கு உண்மையிலேயே சாமி வந்து ஆடினார். இதில் 40 நடன கலைஞர்கள், 300 துணை நடிகர்கள், நடிகைகள் நடித்தனர்.

தீ மிதி காட்சி, ஆணி செருப்பு அணிந்து நடக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டது. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, காதல் சுகுமார், வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.சிவராம்குமார் தயாரிப்பு. செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு. ஏகே.ரிஷால் சாய் இசை. பழனி, கொடைக் கானல், நெய்க்காரன்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறையில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார் இயக்குனர் மில்கா செல்வகுமார்.

Tags : Sami ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...