×

கர்ப்பமாக இருப்பது 6 வாரம் கழித்துதான் தெரிந்தது; எமி ஜாக்ஸன்

நடிகை எமி ஜாக்ஸன், லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் எமி ஜாக்ஸன் தனது இணைய தள பக்கத்தில் ஜேழடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் எமி ஜாக்ஸன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகுதான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன் மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். குழந்தை பிறந்த பின்னர் மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்றார் எமி.

Tags : Amy Jackson ,
× RELATED வேணும்ம்ம்... ஆனா வேணா... தனிமை முகாமில்...