×

எம்ஜிஆர் தொப்பி: பார்த்திபன் தயக்கம்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘குப்பத்து ராஜா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பார்த்திபன், எம்ஜிஆர் தொப்பி வைத்து நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’இப்பட இயக்குனர் பாபா பாஸ்கர் ஹிட்லர் மாதிரி. அவர் நினைத்ததை மட்டுமே படமாக்கினார்.  இது தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். எம்ஜி ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். எம்ஜிஆர் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற குழப்பம் இருந்தது. கதாபாத்திரம் மிகவும் நல்லவர் என்பதால் எம்ஜிஆரின் தொப்பி அணிந்து நடித்தேன்.

ஹீரோ ஜிவி பிரகாஷ்குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது’ என்றார் பார்த்திபன். ‘பாபா பாஸ்கர் அவருடைய வாழ்வியலில் இருந்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ராஜாவாக பார்த்திபன் நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்கு பிறகு இப்படத்தில் அவருடன் நடிக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டேன்’ என்றார் ஜிவி.பிரகாஷ்குமார்.

Tags : Parthiban ,
× RELATED சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி