×

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம்?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ‘’அயர்ன் லேடி’’ என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் சினிமா படமாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். தவிர, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கையை டெலி சீரியலாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். விஜி சந்திரசேகர் சசிகலாவாக நடிக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘’தலைவி’’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்தியில் ‘’ஜெயா’’ என்று தலைப்பு சூட்டப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இதற்கான நடிகர், நடிகை தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.
ஜெயலலிதா வேடத்தில் நடிக்க, மூன்று மொழிகளிலும் அறிமுகமான நடிகையை தேடி வந்தனர்.

தற்போது கங்கனா ரனவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியில் தனது வாழ்க்கையைப் படமாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கங்கனா ரனவத், அதை கைவிட்டுவிட்டு, ‘’தலைவி’’ படத்தில் நடிக்கிறார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், அவருக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பாலிவுட் படவுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Tags : Gangana ,Jayalalithaa ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...