தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பற்றிய புது தகவல்...

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. இது இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளது. விரைவில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : TAL Ajith ,
× RELATED செக் நாட்டு பக்தர்கள் சதுரகிரியில் தரிசனம்