×

இந்தியா – இங்கி. தடையற்ற வர்த்தகம் புஸ்ஸானது ஒப்பந்தம்

லண்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையேயான தடையற்ற ஒப்பந்தம் தாமதமாகும் என இங்கிலாந்து அமைச்சர் கூறி உள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையே, இந்த தீபாவளிக்கு முன்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், சில பிரிவுகளில் முரண்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தீபாவளிக்கு முன்பாக இதில் தீர்வு ஏற்படும் என கருதப்பட்டது.இந்நிலையில், இங்கிலாந்து வர்த்தக துறை அமைச்சர் கெமி படேனோச் நேற்று அளித்த பேட்டியில், `சுங்க கட்டணம் 150 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதால், இந்தியா உடனான ஒப்பந்தம் வர்த்தக துறையில் பெரும் வெற்றி அடையும். அக்டோபர் 24ம் தேதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்கும் இலக்கை எட்ட முடியவில்லை. பல்வேறு பிரிவுகளில் முக்கிய பேச்சுவார்த்தை எட்டப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்….

The post இந்தியா – இங்கி. தடையற்ற வர்த்தகம் புஸ்ஸானது ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : India ,London ,UK ,Minister ,England… ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை