ஹாலிவுட் செல்லும் நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நிவேதா பெத்துராஜ், பொதுவாக எம்மனசு தங்கம், டிக்.டிக்.டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல், விஷ்ணு விஷால் ஜோடியாக ஜகஜால கில்லாடி,  வெங்கட் பிரபுவின் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போவதாக அவர் தற்போது கூறுகிறார். தமிழ் படங்களில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து அமெரிக்கா சென்று ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா போய் விடுவேன். இந்த விஷயத்தில், எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காகவே ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன்.”

Related Stories: