×

திருமணத்துக்கு முன்பே எமி ஜாக்ஸன் கர்ப்பம்! அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நடிகை எமி ஜாக்ஸன் 2.0 படத்துக்கு பிறகு தமிழில் புதிய படம் எதுவும் நடிக்கவில்லை. இதற்கிடையில் ஹாலிவுட் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் தனது பாய் பிரண்ட் ஜார்ஜ் பனயோட்டோ புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் இந்த ஆண்டில் திருமணம் நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் பகிரங்கமாக டேட்டிங்கில் ஈடுபட்டனர்.

தற்போது தனது இணைய தள பக்கத்தில் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் எமி. அதற்கு காரணம், அதில் தான் கர்ப்பமாக இருப்பதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார். எமி வெளியிட்டுள்ள மெசேஜில்,’கோபுரத்தில் நின்று நான் உற்சாக குரல் எழுப்ப நேரம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இன்றைக்கு (நேற்று) தாய்மார்கள் தினம்.

இதுதான் மிகச் சிறந்த தருணம்... இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும்விட உன்னை காதலிக்கிறேன்.... அது சுத்தமான... நேர்மையான காதல். நமது குழந்தையை காண இனியும் காத்திருக்க முடியாது...’ என குறிப்பிட்டிருக்கிறார். எமியின் இந்த மெசேஜ்தான் ரசிகர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. திருமணம் ஆகாமலே அவர் கர்ப்பமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Pregnancy ,Emmy Jackson ,
× RELATED வேணும்ம்ம்... ஆனா வேணா... தனிமை முகாமில்...