மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்

கொடி படத்தில் அண்ணன், தம்பி என்று இரு வேடங்களில் நடித்தார் தனுஷ். இப்போது வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.  இதில் அவர் தந்தை, மகனாக நடிக்கிறார். 45 வயது நிரம்பிய தந்தை தனுஷ் ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

பூமணி எழுதியிருக்கும்  ‘வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் பசுபதி, இயக்குனர் பாலாஜி  சக்திவேல், கருணாஸ் மகன் கென், பவன் நடிக்கின்றனர்.

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து கொடி துரை.செந்தில் குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ், இதிலும் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு சினேகா ஜோடி.

Tags : Dhanush ,
× RELATED தனுஷ் காட்டிய வெள்ளை கொடி