×

நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு பயிற்சி அளித்து வேளாண்துறை சாதனை-முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் பெருமிதம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்க அட்டமா திட்டம் மூலம் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, மீன் வளர்ப்பு போன் பயிற்சி அளித்து வேளாண் துறை சாதனை படைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமிதம் அடைந்துள்ளனர்.தமிழக அரசின் வேளாண்மை துறையின் அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-6ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதன் வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் இம்மாவட்ட திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராவீந்திரன், மற்றும் வேளாண்மை துணை இயக்குநரின் (மத்திய திட்டம்) ஆணைகளின் படியும், முத்துப்பேட்டை வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் உத்தரவின்படியும், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பன்னீர்செல்வம், சவுமியா ஆகியோர் தலைமையிலும், வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலைப்படுத்தி திட்டங்கள் குறித்து இக்குழுவின் உறுப்பினர்களை கொண்டு ஆலோசனை மேற்கொள்ளுதல், இவ்வட்டார உழவர் நண்பர்கள் மூலம் திட்டங்கள் மற்றும் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அடிக்கடி சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் மூலம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை அடிக்கடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் சார்ந்த சகோதரத்துறைகள் அனைத்தும் ஒன்றினைந்த திட்டத்தின் இனங்களை கொண்டு அட்மா திட்டத்தின் மூலம் வெளி மாநிலம், உள் மாநிலம், உள் மாவட்டம் அளவிலான பயிற்சிகளுக்கும் மற்றும் கண்டுநர் சுற்றுலாவிற்கும் விவசாயிகளை அழைத்து செல்லுதலும், செயல்விளக்க திட்டத்தின் இனங்களின் உபகர்ணங்களை கொண்டும் செயல்விளக்கம் செய்து காண்பிப்பதும், பண்ணை பள்ளிகள் நடத்துதலும், உழவர்களின் நலனுக்காக குழுக்களுக்கு திறன் மேம்பாட்டுபயிற்சிகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இப்பகுதி வட்டார விவசாயிகள் பழைய புதிய தொழில் நுட்பங்களை கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் பயன்பெறுகிறனர். மேலும் குறிப்பாக இப்பகுதி விவசாயிகளுக்கு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, தென்னை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம், பாரம்பரிய நெல்களை உற்பத்தி செய்தல், நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுதல் ஆகிய பயிற்சி முக்கியமானது. அதேபோல் ஒவ்வொரு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை அளித்து அந்த பொருட்களை அவர்களுக்கே இலவசமாக வழங்குவது, இதில் மரம் ஏறும் கருவி, மருந்து அடிக்கும் பிரேயர் உட்பட பல்வேறு விவசாய உபகரணங்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி பண்ணைபள்ளி மூலம் விவசாய குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது தனித்திறமையை வளர்த்துள்ளனர்.இத்திட்டத்தில் பயனடைந்த விசாயிகள் கூறுகையில்:முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் சார்ந்த சகோதரத்துறைகளின் அட்மா திட்ட தொழில் நுட்பங்கள் பயனள்ளதாக இருக்கிறது தற்போதைய தமிழக அரசு இந்த திட்டத்திற்கு மேலும் பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இத்துறையின் அட்மா திட்டத்திற்கு முழு அங்கமாக விளங்க கூடிய வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், ஆகியோருக்கு இவ்வட்டார அளவிலும் இம்வாவட்ட அளவிலும் விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.இதுகுறித்து தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பன்னீர்செல்வம், சவுமியா ஆகியோர் கூறுகையில்:தமிழக அரசின் வேளாண்மை துறையின் சிறப்பு திட்டமான அட்மா திட்டம் மூலம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, தென்னையில் சொட்டுநீர் பாசனம், சாகுபடி பாரம்பரிய நெல் வகைகள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துபயிர்கள், மூலிகை பயிர்கள் மர வகைகள், காய்கறி பயிர்கள், மீன் வளர்ப்பு மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து தொடர்ச்சியாக பயிற்சி அளித்து ஒவ்வொரு விவசாயிகளையும் தனித்திறனை வளர்த்துள்ளோம். அதேபோல் விவசாயிகளின் அவர்கள் சார்ந்த பணிகளின் சந்தேகம் குறித்து எந்தநேரத்தில் தொடர்புக்கொன்டாலும் அவர்களுக்கு உரிய பதில் கூறி அடுத்தக்கட்ட பணிகளுக்கு செல்ல வைக்கிறோம். நேரடியாகவும் களஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம். இதற்கு வேளாண்மை துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் துணையாக உள்ளனர். தமிழக அரசும் வேளாண்மைத்துறை பணியாளர்களை ஊக்கப்படும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனால் நாங்களும் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறோம் என்றனர்….

The post நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு பயிற்சி அளித்து வேளாண்துறை சாதனை-முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : MUTHUPPATT ,Muthupupatta ,Atama ,
× RELATED 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா...