×

தயாரிப்பாளருக்கு அமீஷா பட்டேல் மிரட்டல்

விஜய் ஜோடியாக புதிய கீதை படத்தில் நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தேசி மேஜிக் என்ற படத்தை சொந்த மாக தயாரித்து நடித்தார். இதற்காக பாலிவுட் தயாரிப்பாளர் அஜய் சிங்கிடம் இரண்டரை கோடி கடன் வாங்கியதாக தெரிகிறது. தேசி மேஜிக் படம் வெளியானவுடன் தருவதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அமீஷா பட்டேலிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் கேட்டார். அவரை சமாதானம் செய்த அமீஷா சில மாதங்களில் வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக கூறியதுடன் காசோலையும் கொடுத்தார்.

காசோலையை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. கோபம் அடைந்த தயாரிப்பாளர் அஜய் சிங் மீண்டும் அமீஷாவை சந்தித்து பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதுடன், சில பெரிய புள்ளிகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை காட்டி, ‘என்னுடைய பவர் தெரியாமல் பேசாதீர்கள்’ என்று மிரட்டினாராம் அமீஷா. இதையடுத்து தயாரிப்பாளர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

Tags : Ameesha Patel ,producer ,
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...