×

நடிகருடன் டேட்டிங் தமன்னா ஆசை

வம்புதும்புக்கு போகாத நடிகை என்று தமன்னாவுக்கு கோலிவுட்டில் ஒரு பெயர் உண்டு. ஆனால் இணைய தளத்தில் பல நடிகைகள் தங்கள் மனம்போன போக்கில் பேசத் தொடங்கிவிட்டனர். செக்ஸ், முத்தக்காட்சி, டேட்டிங் போன்றவைபற்றி பகிரங்கமாக பேசி ரசிகர்களை ஈர்க்கின்றனர். இதனால் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் அவர்களது ஃபாலேயர்ஸ் எண்ணிக்கை பல லட்சம் உயர்கிறது. அந்த போட்டியில் தற்போது தமன்னாவும் பங்கெடுக்கத் தொடங்கி விட்டார்.

கடந்த சில மாதங்களாகவே தமன்னா தடாலடியாக பேசி ஆச்சர்யப்பட வைத்து வருகிறார். தமன்னாவை பொறுத்தவரை உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார். ஆனால் அப்படியொரு காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டால் யாருடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று தெரிவித்தார். பின்னர் மீடூ விவகாரம்பற்றி கருத்து கூறும்போது,’அதை சிலர் விளம்பரத்துக்காக பேசி வருகின்றனர். அதுவொரு நாடகம் எனச் சொல்லி ஒருசிலரிடமிருந்து  வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்நிலையில் டேட்டிங் பற்றி பளிச்சென பதில் அளித்திருக்கிறார்.  எந்த நடிகருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று தமன்னாவிடம் கேட்டபோது?’ இந்தி நடிகர் விக்கி கவுஷல் உடன் டேட்டிங் செல்ல விரும்புவ தாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். விக்கி கவுஷல் இந்தி பட இயக்குனர் ஷாம் கவுசலின் மகன். ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தமன்னாவுக்கு இந்தி படவுலகில் வலம் வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது. தற்போது காமோஷி என்ற இந்தி படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் வெளிவர தாமதமாகிறது. பாலிவுட் வட்டார இயக்குனர்கள், நடிகர்களின் கவனத்தை கவரவே அடிக்கடி இந்தி நடிகர்கள் பற்றி தமன்னா பேசி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Tamanna ,actor ,
× RELATED வறுமையில் வாடும் மகாபாரத நடிகர்