×

தனுஷ் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ் கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் ராட்சசன் படப் புகழ் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. துரை செந்தில்குமார் இயக்கும் படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 34-ஆவது தயாரிப்பாகும்.

ராம்குமார் இயக்கும் படம் 35-ஆவது படமாகும்! இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tags : actor ,Dhanush ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி