கேங்ஸ் ஆப் மெட்ராஸ் பட ஷூட்டிங்கில் இருந்து நடிகைகள் ஓட்டம்

மாயவன்  படத்தை தொடர்ந்து சி.வி.குமார் தயாரித்து இயக்கியுள்ள படம், கேங்ஸ் ஆப்  மெட்ராஸ். அசோக், பிரியங்கா ருத் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து  சி.வி.குமார் கூறியதாவது: இது போதை மருந்து  கடத்தல் தொடர்பான கேங்ஸ்டர் படம். இந்த கும்பலில் சிக்கிய  பெண், எப்படி தப்பிக்கிறாள் என்பது கதை. மற்ற கேரக்டர்களை விட, இந்த பெண்  கேரக்டர்தான் பவுர்ஃபுல்லானது. நான்கு ஆண்களை அடித்து வீழ்த்துவது  போல் ஹீரோயின் வேண்டும்.

நிஜமாகவே அடிக்க வேண்டும். அடி வாங்க வேண்டும்.  சண்டைக் காட்சியில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆரம்பத்தில்  சொன்னோம். இதனால் சில முன்னணி ஹீரோயின்கள் நடிக்க முன்வரவில்லை. 100 பேர் வரை ஆடிஷன் செய்தோம். அதில் மூவரை தேர்வு செய்து பயிற்சிக்கு  அனுப்பினோம். ஆனால், பயிற்சியின் கடுமை தாக்குப்பிடிக்க முடியாமல் 2 நடிகைகள் ஓடிவிட்டனர். கடைசி வரை இருந்து பயிற்சியை முடித்த பிரியங்கா ருத் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Actresses ,Gangs ,film shooting ,Madras ,
× RELATED நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை