மஞ்சுவாரியர் மனதுக்கு நெருக்கமான தனுஷ்

மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிகர் திலீப்பை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமலிருந்த மஞ்சுவாரியர், தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தமிழில் நடிப்பதுபற்றி மஞ்சுவாரியர் கூறியதாவது:

தமிழில் நான் நடிக்கும் அசுரன் படமும், அப்பட ஹீரோவும் (தனுஷ்) என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகி மாறிவிட்டார்கள். இந்தகூட்டணி தேசிய விருது பெற்ற கூட்டணி என்பதால் என் தோழிகள் நான் நடித்து வரும் படங்களிலேயே அசுரன் குறித்துதான் அதிக ஆர்வமாக விசாரிக்கிறார்கள்.

மலையாள மொழி எவ்வளவு நன்றாக தெரியுமோ அந்தளவுக்கு தமிழிலும் எனக்கு எழுதப் படிக்க பேசத் தெரியும். எனவே இப்படத்துக்கு நானே டப்பிங் பேசுவேன். டைரக்டர் வெற்றிமாறன் என்னிடம் கேட்டுகொண்டதால் இப்படத்தின் கதை குறித்தும், என் கதாபாத்திரம் குறித்தும் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இவ்வாறு மஞ்சுவாரியர் கூறினார்.

Tags : Dhanush ,Manjeri ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி