×

கிரிக்கெட் வீரர் நடராஜன் கதையில் சிவகார்த்திகேயன்

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.சேலத்தை சேர்ந்தவர் நடராஜன். இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். இந்தியில் டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்டோரின் வாழ்க்கை படமாகியுள்ளது. இந்த படங்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. அதுபோல் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரைப் பற்றி தமிழில் படமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. அந்த வீரர், நடராஜன். நடராஜனின் தந்தை நெசவு தொழிலாளி. தாய் சிறிய அளவில் உணவகம் நடத்தி வந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, பிறகு நண்பனின் உதவியால் சென்னைக்கு வந்து, அங்கு டிவிசன் கிரிக்கெட் பிறகு டி.என்.பிஎல், ஐபிஎல் என நடராஜன் தன் வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்தார். டேவிட் வார்னரின் செல்லப் பிள்ளை போல் மாறிய நடராஜன், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறினார். தற்போது ஐபிஎல் மூலம் கோடிக் கணக்கில் ஊதியம் பெற்ற நடராஜன், தம்மை போல் மற்றவர்களுக்கு துன்ப படக்கூடாது என்பதற்காக சேலத்தில் கிரிக்கெட் அகாடமியை உருவாக்கி மற்ற இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறார். தற்போது நடராஜனின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கனா படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் , எதிர் நீச்சல் படத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரராகவும் நடித்து இருக்கிறார். …

The post கிரிக்கெட் வீரர் நடராஜன் கதையில் சிவகார்த்திகேயன் appeared first on Dinakaran.

Tags : Sivakarthigayan ,Natarajan ,Chennai ,Sivakarthykeyan ,Saleta ,IPL ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே யூடியூப் பார்த்து கொள்ளை...