×

பாலிவுட் போட்டோகிராபருடன் ஸ்ரத்தா கபூர் திருமணம்?

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர். இப்படம் ரிலீசாவதற்கு முன்பே அவரைப் பற்றிய காதல் மற்றும் திருமண கிசுகிசுக்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஸ்ரத்தா கபூருக்கும், பாலிவுட் போட்டோகிராபர் ரோஹன் ஷிரெஷ்தாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரத்தா கபூருக்கு 32 வயதாகிறது. எனவே, குடும்பத்தினர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றனர்.

முன்னதாக, டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க சம்மதித்த ஸ்ரத்தா கபூர், ஒரு வருடம் பேட்மின்டன் பயிற்சி பெற்ற நிலையில், திடீரென்று படத்தில் இருந்து விலகினார். திருமண விவகாரத்தால் ஸ்ரத்தா கபூர் விலகினார் என்று சொல்லப்பட்டாலும், கடுமையான பயிற்சி பெற்றும் சாய்னா நேவால் காட்டும் எனர்ஜி அளவுக்கு ஈடுசெய்து தன்னால் நடிக்க முடியாது என்பதாலேயே விலகியதாக, ஸ்ரத்தா கபூர் தரப்பில் கூறப்படுகிறது.

பாலிவுட் வில்லன் சக்தி கபூரின் மகள்தான் ஸ்ரத்தா கபூர். அவரது திருமணம் குறித்து சக்தி கபூரிடம் கேட்டபோது, ‘எந்த தந்தையும் தன் மகள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாக வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால், இந்த காலக்கட்டத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் சுதந்திரம் கொடுக்க வேண்டும். தங்களுக்குப் பொருத்தமானவரை அவர்களே தேர்வு செய்துகொள்ள உரிமை இருக்கிறது.

பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேர்வு செய்த காலம் மலையேறிவிட்டது. எல்லா விஷயத்திலும் பிள்ளைகளின் கருத்தைக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அது வாழ்க்கைத்துணை தேர்வாக இருந்தாலும் சரிதான். தனக்குப் பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஸ்ரத்தா கபூர் எப்போது சொன்னாலும், அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். இப்போது அவர் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்’ என்றார்.

Tags : Strapa Kapoor ,photographer ,
× RELATED திருவட்டாரில் பரபரப்பு ஆற்றில் மூழ்கி போட்டோ கிராபர் பலி