×

சம்பள விவகாரம் ரகுல் ப்ரீத் கோபம்

ரகுல் ப்ரீத் சிங் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் கடந்த ஆண்டு அவருக்கு பட வாய்ப்பு இல்லாமலிருந்தது. இதற்கிடையில் ரகுல் ப்ரீத் தனது சம்பளத்தை உயர்த்தியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்றும் அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தகவல் பரவியது. இந்த தகவல் ரகுலுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. இதுபற்றி அவர் கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து ரகுல் கூறும்போது,’சிலர் என்னைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர். அதுபோன்ற வதந்திகளை கண்டு பயப்படும் ஆள் நானில்லை. என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரத்திற்கு வருவேன். என்னை தாக்க வேண்டும் என்று எண்ணினால் நேரடியாக வாருங்கள் பார்க்கலாம்’ என்றார். இந்த ஆண்டில் சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் புதியபடம் என 2 தமிழ் மற்றும் 2 இந்தி  படங்களில் நடித்து வருகிறார்.

Tags : Rakul Preet ,
× RELATED ஏலியன் கதையில் ரகுல் பிரீத் சிங்