×

வைபவ் ஜோடியாகும் வாணி

நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வைபவ். இதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் அறிமுகம் ஆகிறார். இது குறித்து நிதின் சத்யா கூறியது: இது கிரைம் திரில்லர் கதை கொண்ட படம். ஜெயம் ராஜாவிடம் உதவியாளராக இருந்த சால்ஸ் இயக்குகிறார். படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நடக்கும் மல்டி டைமன்ஷன் பாணியிலான படமிது. இதில் வைபவ் போலீஸாக நடிக்கிறார்.

சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கிய வேடங்களில் பூர்ணா, ஈஸ்வரி ராவ் நடிக்கிறார்கள். ஒரு நிஜ சம்பவத்தோடு கற்பனையும் கலந்த கதையாக உருவாகியுள்ளது. அரோல் கரோலி இசையமைக்கிறார். ஷாண்டி ஒளிப்பதிவு. ஜூலையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tags : Vaibhav ,wives ,
× RELATED பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!