×

மலிவான விளம்பரம் தேடுகிறார் ராதாரவி; நயன்தாரா விமர்சனம்

தம்மை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ராதாரவிக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்மை பற்றி ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்துமாறு நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

திரைப்பட விழாவில் ராதாரவி பேசிய போது சிலர் கைதட்டி ரசித்து, சிரித்து மகிழ்ந்ததை சுட்டிய காட்டிய நயன்தாரா, இது போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை ராதாரவி போன்றவர்கள் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசுவது நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தரக்குறைவாக பேசி மலிவான விளம்பரத்தை தேட ராதாரவி முயற்சி செய்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

பொது வாழ்க்கையின் அனைத்து தளத்திலும் பெண்கள் முன்னணிக்கு வந்து செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ராதாரவி போன்ற மூத்த கலைஞர்கள் செயல்பட வேண்டும் என்று நயன்தாரா அறிவுறுத்தியுள்ளார். ராதாரவி போன்றோர்கள் பெண்களை நடத்தும் விதம் கண்டு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.  

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

ராதாரவி மீது உடனே நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நன்றி தெரிவிப்பதாக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடியான நேரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Nayantara Review ,
× RELATED விஷாலின் ரத்னம்