கிரிக்கெட் வீரர் டோனிக்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல துடிக்கும் மேகா ஆகாஷ்

கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க  வாய்ப்பு வந்தது. ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தவிர, சிம்பு நடித்த, வந்தா ராஜாவாகத்தான வருவேன் படத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜீத், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டேன்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜீத்தை பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்ஸமாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.

தல டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்றார் மேகா. மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜீத் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் மேகாவை கலாய்த்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார் ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கமென்ட்ஸ் பகிர்ந்த வருகின்றனர்.

Tags : Megha Akash ,Dhoni ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி