ராதாரவி நடிகைகளின் குணங்களுக்கு சான்று கொடுக்கும் தலைவரா? டாப்சி விளாசல்

ராதாரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? என நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு நடிகை டாப்சி கண்டனம் தெரிவித்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள்.

ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும்  நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராதரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், மற்ற நடிகைகள் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக ராதாரவி பேசுவார் என எண்ணிப்பார்க்கிறேன் என்றார்.

Tags : Radharavi ,actresses ,
× RELATED வனத்துறை பணி தேர்வில் முறைகேடு...