விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் - அனிருத் அமைத்துள்ள மெகா கூட்டணி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரின் படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல், இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. வரும் ஜூலை மதம் படப்பிடிப்பு தொடங்கி 2020-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags : Vignesh Shivan - Sivakarthikeyan - Mega Coalition ,Anirud ,
× RELATED கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்