×

அதிக சம்பளத்தில் வேலை என்ற விளம்பரத்தை நம்பி 6 மாத சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்ல வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மியான்மர், கம்போடியாஆகிய நாட்டில் இருந்து மீட்கப்பட்டவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் பற்றி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி திருச்சியில் இயங்கி வரும் ‘கேர் சன்சல்டன்சி’ என்ற நிறுவனத்தை சேர்ந்த முகவர்களான ஹானவாஸ் மற்றும் முபாரக் அலி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இது போன்ற மோசடிகள் பற்றியும் அதில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. ஆகவே, வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனங்களின் உண்மை தன்மை அறியாமல் சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய எவரும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம். இதுபோன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு nricellth.dgp@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை தமிழக காவல்துறை வழங்கும். இவ்வாறு டிஜிபி தனது அறிக்கையில் கூறியுள்ளார்….

The post அதிக சம்பளத்தில் வேலை என்ற விளம்பரத்தை நம்பி 6 மாத சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்ல வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : DGP ,Shailendrababu ,Chennai ,Tamil Nadu Police ,Myanmar, Cambodia ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு