×

யானை, பாம்புடன் விளையாடும் விஜய் வில்லன்

விஜய் நடித்த துப்பாக்கி, அஜீத் நடித்த பில்லா 2ம்பாகம், சூர்யாவுடன் அஞ்சான் படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். தற்போது இந்தியில் ஜங்கிலி, கமாண்டோ 3, யாரா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜங்கிலி படம் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் மலைப்பாம்புடன் வித்யூத் நடித்தார்.

அப்போது மலைபாம்பை அநாயிசமாக தனது கைகளில் பிடித்தும், உடம்பில் போட்டும் அதனுடன் நட்பாக இருந்தார். வித்யூத் மார்ஷல் ஆர்ட் கலைகளில் கைதேர்ந்தவர். களரிபயட்டு கலையின் விதிகளை பயன்படுத்தி மலைபாம்புடன் எப்படி சிநேகிதமாக இருக்க முடியும் என்பதை வீடியோ வெளியிட்டு விளக்கி உள்ளார். யானைகளுடனும் இப்படத் திற்காக நடித்திருக்கிறார் வித்யூத்.

ஜங்கிலி படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது. தற்போது அது தள்ளிப்போய் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. தமிழில் புதிய படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க வித்யூத்தை சில இயக்குனர்கள் அணுகியபோது அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். இந்தியில் ஹீரோவாக நடிப்பது இதனால் பாதிக்கும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Vijay ,villain ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...