×

உடனே திருமணம் திரிஷா திட்டம்; அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளை யார்?

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக் கிறார், அனுஷ்கா பிரபாஸை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் யாரும் உறுதி செய்யவில்லை. முன்னதாக திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது.

அதற்கு மாறாக திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.  ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து திரிஷா கூறும் போது,’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். திரிஷாவின் பார்வையில் படப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

Tags : Trisha ,bride ,
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா