ஹாலிவுட் நடிகரின் முகத்தில் குத்திய மாஜி மனைவி

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ ஹாலிவுட் படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜானிடெப். ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜானிடெப்புக்கு 55 வயது ஆகிறது. லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை மணந்து அவரையும் விவாகரத்து செய்தார்.

ஜானிடெப் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக அம்பெர் ஹெர்ட் சமீபத்தில் கூறி இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அம்பெர் ஹெர்ட் தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்புகிறார் என்று கூறி அவர் மீது ரூ.355 கோடி நஷ்ட ஈடு கேட்டு  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஜானி டெப்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘ஜானிடெப்பை முகத்தில் குத்தி அவரது கைவிரலை துண்டித்துள்ளார் அம்பர் ஹெர்ட்’ என புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். இதுகுறித்து ஜானி டெப் கூறும்போது,’அம்பெர் ஹெர்ட்டை நான் அடிக்கவில்லை அவர்தான் என்னை தாக்கினார்’ என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: