பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்; நடிகை தமன்னா கருத்து

மீடூ இயக்கம் சார்பில் இயக்குனர், நடிகர்கள் மீது பல நடிகைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பாலியல் தொல்லை தந்தது குறித்து பகிரங்கமாக புகார் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர். ஒரு சிலர் போலீஸில் புகார் அளித்தனர். தங்கள் மீது புகார் அளித்த நடிகைகள் மீது சில நடிகர்கள் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தனர். இந்த விவரகாரமெல்லாமே நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது மீடூ சர்ச்சை கிளம்பி உள்ளது.

இவர் தமன்னா நடித்த 2 இந்தி படங்களை இயக்கி உள்ளார். சஜித் கான் இயக்கிய, ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய 2 இந்தி படங்களில் தமன்னா நடித்திருந்தார். இப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சஜித் கான் மீது தற்போது மீடூ சர்ச்சை எழுந்தது குறித்து தமன்னாவிடம் கருத்து கேட்டபோது அவர் பதில் அளித்தார்.

தமன்னா கூறும்போது, ‘என்னைப் பொறுத்தவரை ஸ்கிரிப்ட் என்ன என்றுதான் பார்ப்பேன். இயக்குனர் சஜித் கான் உடன் நான் பணியாற்றிய 2 படங்கள் பெரிதாக போகவில்லை. ஆனால் அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. என்னைப் பொறுத்தவரை அவருடன் பணியாற்றுவது எளிதாகவே இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

Tags : Tamanna ,
× RELATED இரண்டு ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி போட தமன்னாவுக்கு ஆசை