×

தமிழ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் கஷ்யப்

இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் டைரக்டர் அனுராக் கஷ்யப். இவர், அவ்வப்போது தமிழில் வரும் சில படங்களை பார்த்துவிட்டு தனது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். இந்நிலையில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தை இவர் சமீபத்தில் பார்த்துள்ளார். இது குறித்து அனுராக் கஷ்யப் கூறும்போது, ‘இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதனால் படத்தில் வரும் காட்சிகளை பற்றி கூற முடியாது.

ஆனால் இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும். இதில் பணியாற்ற முடியாமல் போனதற்கு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். படத்தில் திரைக்கதையை மிஷ்கின், நலன் குமாரசாமியுடன் சேர்ந்து தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார். அனுராக் கஷ்யப்பையும் திரைக்கதை எழுத தியாகராஜன் குமாரராஜா அழைத்திருந்தார். இந்தி படங்களில் பிசியாக இருந்ததால் அவர் இதில் பணியாற்றவில்லை.

Tags : Anurag Kashyap ,film director ,
× RELATED தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும்:...